திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேசுவரி அருள்பாலித்து வருகிறாள். இத்தலம் சிவபெருமானின் பெயரில் அமைந்து இருந்த போதிலும் இங்கு அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அதிகப்படியான மகிமையுண்டு. சக்தி ஸ்வரூபமாய் விளங்கிடும் அன்னை மிகவும் உக்கிரமூர்த்திமாய் இருந்தாள். இதன் காரணமாக காலையில் ஆலயத்தினை திறப்பவருக்கு தீங்கு நேரும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
ஆதிசங்கரர் ஒரு சமயம் இந்த ஆலயத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரமான ஸ்வரூபத்தினை பற்றி தெரிவித்தனர். உடனே ஆதிசங்கரர் அகிலாண்டேசுவரியை சாந்தப்படுத்த இரு சக்கரங்கள் எடுத்து வந்தார். அவைகளுள் ஒன்று இறைவனுக்கான யந்திர சக்கரம் ஆகும். மற்றொன்று அகிலாண்டேஸ்வரிக்கான ஸ்ரீசக்கரமும் ஆகும்.
ஆனால் ஆதிசங்கரர் இத்தலத்திற்கு சென்றிடும் சமயத்தில் தலத்தினை காவிரி ஆறு வலம் வந்தமையால் அவரால் சென்றடைய முடியவில்லை. இதன் காரணமாக அவரால் தாம் கொண்டு வந்த சக்கரங்களை செய்ய இயலவில்லை.
இதையடுத்து தாம் கொண்டுவந்த இரு சக்கரங்களையும் கம்மலாக மாற்றிச் செய்து அன்னையின் காதுகளில் அணிவித்திடச் செய்தார். இருசக்கரங்களில் ஒன்று தன் ஆகர்ஷணச் சக்கரம் ஆகும். மற்றொன்று ஜன ஆகர்ஷனச் சக்கரம் ஆகும்.
முதல் சக்கரமான தன் ஆகர்ஷண சக்கரத்தின் மகிமையால் ஆலயத்திற்கு பொன்னும் மணியும் பெருமளவில் குவிந்திட வேண்டும் என்பதாகும். இரண்டாவது சக்கரமான ஜன ஆகர்ஷண சக்கரத்திற்கான மகிமை ஆலயத்திற்கு மக்களை கவர்ந்து இழுப்பது ஆகும். மேலும் அழகிய கணபதி சிலை ஒன்றையும் உருவாக்கி அன்னையின் எதிரே அமர்த்தி வைத்தார். பிள்ளையைக் கண்டதும் சினம் தணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி சாந்தசொரூபியானாள்.
அந்த அழகிய காதணிகளே அன்னையின் அடையாள மாகவும் மாறியது. கம்மல் என்பது அன்னை அகிலாண்டேஸ் வரியின் கிரியாசக்தி. அதை வணங்கினால் செயலில் வெற்றி பெறலாம்.
No comments:
Post a Comment