Sunday 3 June 2018

முனிவரை மிஞ்சிய மன்னன்



அம்பரீஷ மன்னர் ஏகாதசி விரதம் இருப்பார். விரதம் முடிந்ததும் ஒருவருக்கு உணவிட்டு சாப்பிடுவார். ஒருமுறை கோபக்காரரான துர்வாசமுனிவர் வந்தார். அவரை சாப்பிட அழைத்ததும், துர்வாசர் பூஜை முடித்து விட்டு வருவதாகச் சொன்னார். வெகு நேரமாகியும் வரவில்லை. திதி முடிய சில நிமிடங்களே இருந்ததால் பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிறிது தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தார். அப்போது துர்வாசர் அங்கு வர, தன்னை மதிக்காமல் விரதம் முடித்த அம்பரீஷன் மீது ஒரு பூதத்தை ஏவினார்.

உடனே விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் அங்கு தோன்றி பூதத்தைக் கொன்று, பின் துர்வாசரை துரத்தியது. மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் துர்வாசர்.

''நான் பகதர்களின் அன்புக்கும், சிரத்தையான விரதங்களுக்கும் கட்டுப்பட்டவன், ஆகையால் அம்பரீஷனிடமே சென்று மன்னிப்புக் கேளுங்கள்,'' என்றார் விஷ்ணு. துர்வாசரும் அப்படியே செய்து உயிர் தப்பினார். ஏகாதசி விரதம் அந்தளவுக்கு உயர்ந்தது.

No comments:

Post a Comment