Saturday 2 June 2018

எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்தது மூகாம்பிகை வழிபாடு

எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்தது மூகாம்பிகை வழிபாடு

கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.

மூகன்னும் அசுரனை அழிக்க இவள் 6 கடவுள்களின் சக்தியை பெற்றாள்.
பிரம்மதேவர் தம் சக்தியை பிராம்ஹி தேவியாகவும்-
மகாவிஷ்ணு தம் சக்தியை வைஷ்ணவி தேவியாகவும்-
பரமேஸ்வரர் தம் சக்தியை சாம்பவி தேவியாகவும்-
இந்திரன் தம் சக்தியை இந்திராசி தேவியாகவும்-
கந்தன் தம் சக்தியை குமாரி தேவியாகவும்-

பூவராகர் தம் சக்தியை வராஹி தேவியாகவும் மாற்றி அம்பிகைக்கு அளித்தனர். அவர்களுடன் வீரபத்திரமும், கனகநாதரும் இணைந்து கொண்டனர். மூகாசுர வதத்திற்கு பிறகு கோல மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கத்தில் மூகாம்பிகை அந்தர்த்தனமானாள்.

எனவே மூகாம்பிகை வழிபாடு எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்த ஒரு சமரச வழிபாடாகும். இதற்கு முன் மஹிஷாசுரனை கொல்ல மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவமாக தோன்றிய அதே தேவி மூகாசுரனின் வதத்திற்கு ஆறு சக்திகள் ஒன்றிணைந்த தேவியாக தோன்றினாள்.

அவள் மறைந்த சுயம்பு லிங்கம் இன்று வரை சக்தி பாகம் - சிவபாகம் என்று பிரிக்கப்பட்டு சக்தி பாகத்தில் மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி இருப்பதாகவும் சிவ பாகத்தில் பிரம்மா, மகாவிஷ்ணு, மகேஸ்வரர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.எனவே, கொல்லூர் மூகாம்பிகையை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன்கள் கிடைக்கும்.

ஆகவே, கொல்லூரில் மூகாம்பிகை பூஜைக்கு முன்னர் அதே தலத்தில் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அசுரனை சம்ஹரிக்கும் பொருட்டு மகாஷாசுரமர்த்தினியாகத் தோற்றம் அளித்த அன்னை துர்க்கா தேவியை வணங்குதல் வேண்டும். அதன்பிறகு பிராம்ஹி, வைஷ்ணவி, இந்தராசி, வராஹி, சாம்பவி, குமாரி ஆகியவர்களை வழிபட்டு, சிவ புத்ரியான புத்ரா தேவியைத் தியானித்து, வீர பத்திரரையும், கனக நாதரையும் நினைவு கூரல் வேண்டும். அன்னையின் ஸ்ரீசக்ரவழிபாடு அம்பிகை யின் பூஜையில் கவனித்து பூஜிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

No comments:

Post a Comment