Saturday, 2 June 2018

இறைவழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள்

இறைவழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள்

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான விரதங்களும் பலன் தரக்கூடியவையே. விரதங்கள் இருப்பதால் மனமும், உடலும் சுத்தம் அடைகிறது. ஆனாலும் சில முக்கிய விரதங்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை நவராத்திரி விரதம், வரலட்சுமி விரதம், கேதாரகவுரி விரதம், பாவை நோன்பு, விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம், காரடையான் நோன்பு ஆகியன ஆகும்.

விரதங்கள் இருப்பதற்கு பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதம் இருக்கும் நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு உபவாசம் இருத்தல், நீர் ஆகாரம் மட்டும் குடித்து உபவாசம் இருத்தல் போன்ற அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடவுளிடம் வைக்கப்படும் நியாயமாக கோரிக்கைகளுக்காக இருக்கும் அனைத்து விதமான விரதங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

No comments:

Post a Comment