Saturday, 2 June 2018

தீர்க்காயுள் உள்ளவர்களா நீங்கள்? எப்படித் தெரிந்துகொள்வது?

astrologiya

ஒருவரின் ஆயுளைத் தெரிந்து கொள்வதற்கு பொதுவாக 8-ம் பாவம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் 8-ம் பாவம், 8-ம் பாவத்தில் உள்ள கிரகம், 8-ம் பாவாதிபதி, 8-ம் பாவத்தைப் பார்க்கும் கிரகம், அம்சத்தில் 8-ம் பாவாதிபதியின் பலம், 8-ம் பாவாதிபதி இருக்கும் நட்சத்திராதிபதி ஆயுள் காரகன் சனி இவர்களை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார்கள் ஞானிகள்.

66 வயதில் இருந்து 99 வயது வரை உள்ள யோகமாகும் அதற்கான கிரக சேர்க்கைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

* குரு லக்னத்தில் இருந்து சுபர் பார்த்தால் அந்த ஜாதகருக்கு பூரண ஆயுள். 

* சுபர் 5-9 அல்லது மூல திரிகோண ராசியில் இருந்து, குரு உச்சம் பெற்று, லக்னாதிபதி பலமாக இருப்பது. 

* சுபர் 5-9ல் இருந்து குரு கடக ராசியில் இருப்பதும் ஜாதகர் நீண்ட ஆயுளைக் கொண்டு இருப்பர். 

* சனி ஆட்சியாய் 9-ல் அல்லது 1-ல் இருப்பதும் நீண்ட ஆயுளுக்கான ஜாதகமே. 

* சந்திரன் ஆட்சி உச்சமாய் 9 அல்லது 12-ல் இருப்பதும் பூரண ஆயுளைப் பெற்று விளங்குவர். 

* லக்னம் அல்லது ராசிக்கு 8-ம் அதிபதி ஆட்சிபெறும் அமைப்பு இருப்பது. 

*  சனி ஆட்சி, உச்ச வீட்டில் அல்லது 3-6-11-ல் அமைவது ஜாதகருக்கு தீர்க்காயுள். 

* சுபக் கிரகம் 6, 7, 8-லும் பாவிகள் 3, 6, 11-ல் இருப்பது பூரண ஆயுளே.

* லக்னம் அல்லது ராசிக்கு நான்கு கேந்திரத்திலும் சுபர் இருப்பது. 

* லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெறும் ஜாதகருக்கு ஆயுள் அதிகம்.  

* சந்திரன் உச்சம் பெறுவது வர்க்கோத்மம் பெறுவதும் நீண்ட ஆயுள். 

* 1, 8, 10-ம் அதிபதிகள் கேந்திரம் அல்லது திரிகோணம் பெறுவது. 

* சனி 7-ம் அதிபதியாகி 5-ம் பாவத்தில் இருப்பது. 

* 1, 8-க்கு உடையவர்கள் 8 அல்லது 11-ல் இருப்பதும் அந்த ஜாதகர் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பர். 

* 10-ம் அதிபதி 5-ல் அல்லது உச்சம் பெறுவது. 

* 1, 10-ம் பாவத்தின் அதிபதிகள் பலம் பெற்று கேந்திரம் பெறுவது நீண்ட ஆயுளைத் தரும். 

* 8-ம் அதிபதியே 9-ம் அதிபதியாகி உச்சம் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் நீண்ட ஆயுளாகும். 

* 8-ம் அதிபதி பலமாய் இருந்து லக்னத்தைப் பார்ப்பது. 

* 1, 9-ம் அதிபதிகள் இணைந்து சரராசியில் இருப்பது. 

* சனியும், 8-ம் அதிபதியும் கூடி இருந்தால் தீர்க்காயுள். சனியும் 8-ம் அதிபதியும் பரிவர்த்தனையாவது தீர்க்காயுள். 

* பலம் பெற்ற குரு 8-ம் பாவத்தைப் பார்ப்பது. 

* குரு, சூரியன் 7/7 ஆக அமைவது நீண்ட ஆயுள் தான். 

* ராகு ரிஷப ராசியில் இருந்து சுபக்கிரகங்கள் பார்ப்பதும் தீர்க்க ஆயுளைப் பெற்றிருப்பர். 

* மகரத்தில் ராகு இருந்து குரு பார்ப்பதும் ஜாதகனுக்கு ஆயுள் கெட்டி தான். 

* சனிக்கு 6, 7, 8-ல் சுபர் இருப்பதும் ஜாதகர் நீண்ட ஆயுள் பெற்றிருப்பர். 

* மகர, கும்ப, துலா லக்னமாக அங்கு சனி ஆட்சி உச்சம் பெறும் அமைப்பும் உள்ள ஜாதகர்கள் பூரண ஆயுள் உள்ளவர்களே. 

* குரு, சுக்கிரன் உச்சம் பெற்று பாவிகள் சம்பந்தம் பெறாமல் இருப்பது நீண்ட ஆயுளுக்கான ஜாதகமே. 

* சூரியனுக்கு 6-ல் பலம் பெற்ற சந்திரன் இருப்பதும் பூரண ஆயுளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. 

No comments:

Post a Comment