Monday 5 February 2018

சப்தமாதர்கள் யார் அம்சம்


ராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, நரசிம்ஹி, இந்திராணி ஆகிய ஏழு பெண் தெய்வங்களே சப்தமாதர்கள். இவர்கள் முறையே பிரம்மா, மகேஸ்வரன், முருகன், விஷ்ணு, வராகர், நரசிம்மர், இந்திரன் ஆகியவர்களுக்குரிய ஆயுதம்,கொடி, வாகனங்களைத் தாங்கியுள்ளனர். இவர்கள் ஆண் தெய்வங்களின் துணைவியர் அல்ல. பராசக்தியின் அம்ச அவதாரங்களான இவர்கள் தனி பெண் தெய்வங்கள் என்றும், லலிதா பரமேஸ்வரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவர்கள் என்றும் தேவி மகாத்மியம் கூறுகிறது. 

அந்தகாசுரன் என்ற அரக்கனுடன் நடந்த போரில் சிவபெருமானுக்கு சப்தமாதர்கள் உதவியதாக மத்ஸ்ய புராணம் கூறுகிறது. சப்தமாதர் சன்னிதியில் விநாயகர், வீரபத்திரர், பைரவர் ஆகிய மூவரில் ஒருவரின் விக்ரஹத்தையும் சேர்த்தே பிரதிஷ்டை செய்வது மரபு. இவர்களில் வாராஹியை தனி தெய்வமாக வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் உண்டானது. 

No comments:

Post a Comment