Monday 5 February 2018

விரதமிருந்த புண்ணியம் உங்களுக்கே வேண்டுமா ?


சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், கார்த்திகை, திருவோணம் போன்ற நாட்களில் வீட்டில் விரதம் இருப்பது நல்லது. இந்த சமயத்தில் வெளியூரில் தங்கி உறவினர் அல்லது மற்றவர்களின் வீட்டில் சாப்பிட நேர்ந்தால் விரத பலன் (உபவாச புண்ணியம்) உணவு கொடுத்தவரை சென்று சேரும் என்கிறது சாஸ்திரம். காசி,கயா, ராமேஸ்வரம் போன்ற புண்ணியத்தலங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது பெரும் புண்ணியம். இத்தலங்களில் தரிசனம் முடித்து, மற்றவர் தானம் அளித்ததைச் சாப்பிட்டால் யாத்திரை செய்த பலன் உணவு அளித்தவரையே சேரும். வேதம், ராமாயணம், பாகவதம், திவ்ய பிரபந்தம் போன்றவற்றை படிக்கும் போதும், முன்னோர் வழிபாடு செய்யும் காலத்திலும் அவரவர் வீட்டில் செய்த உணவை சாப்பிட்டால் தான் அவரவருக்கு புண்ணியம் சேரும். 

No comments:

Post a Comment