Friday, 2 February 2018

இலை சேர்த்தா இரட்டிப்பாகும்


துளசி என்னும் சொல்லுக்கு "ஒப்பிட முடியாதது அல்லது உயர்ந்தது' என்பது பொருள். துளசி இலையால் அர்ச்சிப்பதும், துளசிமாலை சாத்துவதும் விஷ்ணுவுக்கு மிகவும் உகந்தவை. துளசிக்கு யாதயாம(பழமை) தோஷம் கிடையாது. முதல் நாள் பறித்த வாடிய துளசியும் பூஜைக்கு ஏற்றது தான். சுவாமிக்கு நைவேத்யம் படைக்கும் போது அதன் மீது துளசி தூவுவது புனிதமானதாகும். அன்னம், ஆடை என தானம் அளிக்கும் போது அதன் மீது துளசி வைத்து கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். "ஒரே ஒரு துளசி இலையால் பூஜித்தாலும் அவரைத் தன் அடியவராக ஏற்று மகிழ்வேன்' என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை வாழ்வில் நிரூபித்தும் காட்டினார். ஒரு சமயம் சத்யபாமாவுக்கும், ருக்மணிக்கும் நடந்த போட்டியில் கிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கம் வைத்த போது, தராசின் தட்டு சமமாகவில்லை. ருக்மணி பக்தியுடன் ஒரு துளசி இலையை வைக்க தராசு சமநிலையை அடைந்தது.

No comments:

Post a Comment