Friday, 2 February 2018

சாப்பிடவும் சாஸ்திரம் இருக்குது


சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தர்மசாஸ்திரம் வகுத்துள்ளது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்ப்பது கூடாது.

* தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.

* கருக்கல் வேளையிலும் (மாலை 6.00-7.00 மணி) நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும். பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.

* இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment