தினமும் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதை "ராகு காலம்' என்பர். இந்த காலத்தில் பயணம் புறப்படுதல், புதிய முயற்சி செய்தல், உபநயனம், திருமணம் ஆகிய சுபவிஷயத்தை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் துர்க்கை, காளி, அங்காரகன்(செவ்வாய்), பைரவர், சண்டிகாதேவி, பிரத்யங்கிரா தேவி, நரசிம்மர் ஆகிய தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.
துர்க்கை சன்னிதியில் நடக்கும் ராகுகால பூஜையில் கலந்து கொண்டால் காரணமற்ற பயம், எதிரிகளால் ஏற்படும் பிரச்னை, கடன் தொல்லை ஆகியவை நீங்கும். வெள்ளிக்கிழமை ராகு காலமான காலை 10.30 - 12 மணிக்குள் துர்க்கைக்கு தீபமேற்றி வழிபட்டால், திருமணத் தடை நீங்கும்.
No comments:
Post a Comment