ஷீரடி பாபா தன்னை தரிசிக்க வரும் அடியவர்களிடம் தட்சணையாகப் பணம் கேட்டுப் பெறுவது வழக்கம். "துறவியான பாபாவுக்கு பணம் ஏன் தேவைப்படுகிறது? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டானது. அதற்கு ஒருமுறை பாபா, "பெருந்தன்மையுடன் பிறருக்குத் தாராளமாக பணம் கொடுங்கள். இதன் மூலம் தீய குணங்கள் விலகி மனம் தூய்மை பெறும்,'' என்று விளக்கம் அளித்தார்.
ஒருமுறை தர்கட் என்ற பெண்ணிடம், பாபா ஆறு ரூபாய் தட்சணை கேட்டார். அதற்கு காரணம் மனதில் உள்ள காமம், கோபம், பேராசை, பொறாமை, சூது, கஞ்சத்தனம் என்னும் ஆறு பகைவர்களையும் தன்னிடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்பதற்காகவே.
No comments:
Post a Comment