Monday 12 February 2018

தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்த விக்ரகம்


எந்தச் செயலையும் துவங்குவதற்கு முன்னர் முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்பது நியதி. இவ்விதியைப் பின்பற்றாததால் தான் பாற்கடலைக் கடைந்தபோது நஞ்சு வெளிப்பட்டது என்பதை தேவேந்திரன் உணர்ந்தான். கடலில் வெளிப்பட்ட வெள்ளை நுரையைப் பயன்படுத்தி ஒரு வலம்புரி விநாயகரைப் படைத்தான். இவர் 'வெள்ளை வாரணப் பிள்ளையார்' எனப்பெயர் பெற்றார். இவரை வழிபட்ட பிறகே, பாற்கடலைக் கடையும் பணி இனிதே நிறைவேறி அமிர்தம் வெளிப்பட்டது. 

கிருதயுகத்தில் கயிலாயத்திலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் பிரம்மலோகத்திலும் இந்த வெள்ளை விநாயகர் வழிபடப்பட்டார். தேவலோகத்தில் இந்த விநாயகரை இந்திரன் வழிபாடு செய்து வந்தான். ஒரு சமயம் இந்திரன் பூவுலகிற்கு வந்த போது, வெள்ளை விநாயகர் விக்ரஹத்தை எடுத்து வந்தான். காவிரிக்கரையில் உள்ள தலங்களை தரிசிக்க வந்த வேளையில், திருவலஞ்சுழி என்ற ஊரில் கீழே வைத்தான். அதன்பின் விக்ரகத்தை எடுக்க முடியவில்லை. இங்குள்ள வலஞ்சுழிநாதர் கோவிலில் இந்த விநாயகர் அருள்பாலிக்கிறார். ஆவணிமாத திருவிழாவின் ஒன்பதாம் நாளில், இந்திரன் சார்பாக கடல்நுரை விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடக்கிறது.

No comments:

Post a Comment