Monday 12 February 2018

பெண்ணின் பெயரில் பெருமாள்

Image result for rayali perumal

பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாற, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இந்த வடிவத்துடன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயாலி என்ற இடத்தில் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். 'ரயாலி' என்றால் 'விழுதல்'. மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் காட்சி தந்தபோது அவர் தலையில் சூடியிருந்த மலர் இங்கு விழுந்ததால் இவ்வூருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் விரல் நகம், ரேகைகள் துல்லியமாகத் தெரியும்படி சிலை நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறம் பெண்ணின் சாயல் உள்ளது. 

கால்களில் தண்டை, சிலம்பு அணிந்து வட்டமாக கொண்டை முடிந்து, மலர் சூடி காட்சி தருகிறார். முன்புறத்தோற்றம் ஆணைப் போல் உள்ளது. ஆண் வடிவத்தை 'ஜெகன்' (உலகை ஆள்பவர்) என்றும், பெண் வடிவத்தை 'மோகினி' (பக்தர்களைக் கவர்பவள்) என்றும் சொல்கிறார்கள். இரண்டையும் இணைத்து சுவாமிக்கு 'ஜெகன்மோகினி கேசவப்பெருமாள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, நாரதர், ஆதிசேஷன், கருடாழ்வார், கங்கை, தும்புரு, ரம்பை, ஊர்வசி ஆகியோரின் சிற்பங்கள் சிலையைச் சுற்றி உள்ளன. சுவாமியின் பாதத்தில் தண்ணீர் பெருகிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment