Monday 5 February 2018

உலகின் முதல் தத்துப்பிள்ளை


சப்தரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தவிர்த்த மற்ற ஆறு பெண்களும், சரவணப்பொய்கையில் முருகனை வளர்த்து ஆளாக்கினர். இவர்களையே கார்த்திகைப் பெண்கள் என்று குறிப்பிடுவர். இவர்கள் ஒருமுறை முருகனிடம் தங்களின் குறைதீர்க்குமாறு வேண்டிக் கொண்டனர். “கந்தா! நாங்கள் தான் ஆறுமுகனான உன்னைப் பெற்றெடுத்ததாக சிலர் உலகில் வதந்தி பரப்பி விட்டனர். இதனை உண்மை என்று நம்பிய எங்களின் கணவன்மார்களான ஆறு ரிஷிகளும் எங்களை விட்டுப் பிரிந்தனர். 

இந்த இகழ்ச்சியை எங்களால் தாங்க முடியவில்லை. எப்படியோ இந்த அவப்பெயர் எங்களுக்கு வந்துவிட்டது. அதுவே உண்மையாகவும் ஆகட்டும். நாங்கள் ஆறுபேரும் உன்னையே சுவீகார புத்திரனாக (தத்துப்பிள்ளை) ஏற்றுக் கொள்கிறோம். இதனை நீயும் ஏற்று அருள்புரிய வேண்டும்,” என்றனர். முருகனும் அவர்களை தன் தாய்மார்களாக ஏற்று, அவர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் தந்தார். இந்தத் தகவல் மகாபாரதம் வனபர்வத்தில் உள்ள மார்க்கண்டேய சம்ஸ்யத்தில் இடம் பெற்றுள்ளது. முருகனே உலகின் முதல் தத்துப்பிள்ளை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

No comments:

Post a Comment