Monday 12 February 2018

சிதறுகாய் போடுவது ஏன் ?


தேர்வு வந்தால் குழந்தைகளுக்கு பிள்ளையார் ஞாபகம் வந்து விடும். “பிள்ளையாரப்பா! ! 'பதினோரு தேங்கா விடலை (சிதறுகாய்) போடுறேன். எனக்கு நிறைய மார்க் வாங்கிக் கொடு” என்று வேண்டுதல் வைப்பார்கள். உண்மையில் சிதறுகாயின் தத்துவம் தெரியுமா? தேங்காய் மீதுள்ள கனமான ஓட்டை உடைத்தால் உள்ளே இனிப்பான பருப்பும், தண்ணீரும் இருக்கும். இதுபோல, மனிதன் தன்னிடமுள்ள அகங்கார எண்ணத்தை கைவிட்டு விநாயகரைச் சரணடைந்தால் வாழ்வு இனிக்கும். சிதறுகாய் உடைப்பதற்கு புராண கதை ஒன்றும் உண்டு. 

ஒருமுறை விநாயகர் சிவபெருமானிடம், “உங்கள் தலையை எனக்கு பலியிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். 

சிவபெருமானும் தன்னைப் போல மூன்று கண்கள் கொண்ட தேங்காயை பூலோகத்தில் சிருஷ்டித்து, அதை விநாயகருக்கு அர்ப்பணித்தார். அன்று முதல் தேங்காய் உடைக்கும் பழக்கம் வந்தது. 

No comments:

Post a Comment