இரண்யாட்சன் என்ற அரக்கன் பூலோக மக்களை துன்பம் செய்தபோது, அது கண்டு பொறுக்காத பூமாதேவி திருமாலிடம் முறையிட்டாள். திருமால் அவனை அழிக்க வந்த போது, பாதாள லோகத்தில் சென்று மறைந்தான். எனவே அவர் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார். இந்த அவதாரம் ஞானத்தை தரக்கூடியது. அநியாயம் ஆழத்திற்குள் புதைந்தாலும்கூட, ஞானமே அதை தேடிச்சென்று அழிக்கும் தன்மை கொண்டது.
இதுபோல பிரகலாதனுக்கு அருள் செய்ய நரசிம்ம வடிவில் திருமால் எழுந்தருளினார். இரண்யனை கொன்று, பிரகலாதனை நாட்டின் அரசனாக்கினார். நரசிம்ம அவதாரம் பயத்தை போக்க கூடியது. மனிதன் முன்னேற வேண்டுமானால் பயத்தை அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக 'மரண பயம்' மனிதனை ஆட்டுவிக்கிறது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த ஞானம் வந்து விட்டால் பயம் விலகி விடும். வராகம், நரசிம்ம குணங்களைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை வழிபடுவதன் மூலம் பயம் நீங்கி ஞானம் பிறக்கிறது. இவர் கல்விச் செல்வத்தையும், பொருள் வளத்தையும் அளிக்கிறார். ஒரு அலுவலகத்தில் உயரதிகாரிக்கு நேர்முக உதவியாளர் போல, திருமாலின் அருளைப்பெற சக்கரத்தாழ்வார் வழிகாட்டியாக இருக்கிறார்.
No comments:
Post a Comment