Sunday, 4 February 2018

வால்மீகி கோவில்


திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ராமாவதாரத்தை 'ராமாயணம்' என்னும் இதிகாசமாக படைத்தவர் வால்மீகி மகரிஷி. இவருக்கு சென்னை திருவான்மியூரில் கோவில் உள்ளது. வால்மீகி, ராமாயணம் எழுதுவதற்கு முன்பு சிவனை வணங்கினார். இதன் அடிப்படையில் இத்தலத்திலுள்ள மருந்தீஸ்வரர் கோவில் அருகில், இவருக்கு கோவில் அமைக்கப்பட்டது. இவர் தெற்கு நோக்கி நின்று வணங்கியபடி காட்சி தருகிறார். இவரது பெயராலேயே இத்தலம் 'திருவால்மீகியூர்' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'திருவான்மியூர்' என்று மருவியது.

No comments:

Post a Comment