Monday 5 February 2018

உருவமில்லாத முருகன்


விருத்தாசலம் அருகிலுள்ள மணவாளநல்லூரில், கொளஞ்சி செடிகள் அடர்ந்த காட்டில் இருக்கும் முருகன் 'கொளஞ்சியப்பர்' எனப்படுகிறார். கருவறையில் உருவமாக இல்லாமல் சக்கரம் பொறிக்கப்பட்ட பீட வடிவத்தில் அவர் காட்சியளிக்கிறார். பீடத்தின் அருகில் வேல் வைக்கப்பட்டுள்ளது. பீடத்திற்கு சந்தனக் காப்பிட்டு பூஜை நடக்கும். பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கோவில் அலுவலகத்தில் கிடைக்கும் ரசீதில் எழுதி சன்னிதியில் சமர்ப்பிக்கின்றனர். இதற்கு 'பிராது கட்டுதல்' என்று பெயர். கொளஞ்சியப்பரிடம் வேண்டிக் கொள்ளும் நியாயமான கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment