Tuesday 6 February 2018

கருட தரிசன பலன்கள்

கருட தரிசன பலன்கள்

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும். மனக்குழப்பம் நீங்கும், பாவங்கள் தொடராது.

திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும். குடும்பம் செழித்தோங்கும்.

செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். தைரியம் உண்டாகும்.

புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும். வைப்பு சூன்யம் நீங்கும்

வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.

வெள்ளி கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.தங்க ஆபரணங்கள் சேரும், அஷ்ட ஐஸ்வர்யமும் நிலைக்கும்

சனி – கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் முக்தி பெறலாம் ஞானம் உண்டாகும்.

No comments:

Post a Comment