Monday, 5 February 2018

இந்த நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அறிவாளிகளாம்..!

astrology-1

பொதுவாக நட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதியாக இருக்கும். அந்தந்தக் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் குணநலன்கள் அமையும். அந்தவகையில், இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்களாம். அது எந்த நட்சத்திரம் என்று பார்ப்போம். 

சித்திரை நட்சத்திரம்.....இது அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம். இந்த நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அறிவாளிகளாக இருந்தாலும், செயலில் முரட்டுத்தனமும், குரலில் கடுமையும் தெரியும். அடுத்தவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்த முயல்பவர்கள்.

சில சமயங்களில்  முன் யோசனை இல்லாமல் தங்களிடம் உள்ளக் கருத்தை சொல்லி விடுவார்கள். அதனால் நிறையப் பேருக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்கள் சொல்லும் சில விஷயங்கள் மூடத்தனமாகத் தோன்றும். ஆனால் அதுதான் பின்னாளில் நடக்கும்.

வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் இவர்கள் முன்னேற்றத்தைப் பாதிக்காது. தன்னுடைய தைரியம், கடின உழைப்பு, அறிவுக்கூர்மையால் வெற்றி காண்பார்கள். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 22, 27, 30, 36, 39, 43, 48 வயதை நெருங்கும்போது பெரும் சரிவுகளையும், சங்கடங்களையும், கெட்ட சம்பவங்களையும் சந்திப்பார்கள். குடும்ப பாசம் அவ்வளவாக இருப்பதில்லை. இவர்களுக்கு குடும்பத்தினரால் அதிக நன்மைகள் கிடைப்பதில்லை.

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்திற்கான பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

சித்திரை முதல் பாதம்

• சிறந்த ஞானம் உடையவர்கள்.

• திறமை உடையவர்கள்.

• கடமையுணர்வு கொண்டவர்கள்.

• கடும் உழைப்பு உடையவர்கள்.

• துணிச்சல் குறைவானவர்கள்.


சித்திரை இரண்டாம் பாதம்

• தெய்வபக்தி உடையவர்கள்.

• நல்லவர்கள்.

• அறிவழியில் நடப்பவர்கள்.

• தன்னம்பிக்கை குறைவானவர்கள்.

• தெளிவற்ற சிந்தனை உடையவர்கள்.

• இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.


சித்திரை மூன்றாம் பாதம்

• நல்ல நடத்தையுடையவர்கள்.

• நல்ல அறிவு உடையவர்கள்.

• உதவும் குணம் உடையவர்கள்.

• நல்லதையே செய்ய நாட்டம் உடையவர்கள்.

• குடும்பத்தைப் பேணி காப்பவர்கள்.



சித்திரை நான்காம் பாதம்

• பகைவரை நேசிப்பவர்கள்.

• சுயபுத்தி உடையவர்கள்.

• வீரம் நிறைந்தவர்கள்.

• சிறந்த பேச்சாளர்கள்.

• வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியுடையவர்கள்.

• தலைமை பதவி வகிக்கும் குணம் உடையவர்கள்.

No comments:

Post a Comment