Saturday 17 February 2018

பெண்கள் செய்யவேகூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று

homam

பெண்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தாலும், முக்கியமாக இதை மட்டும் செய்யவேக்கூடாது என்கிறார்கள் ஜோதிடர்கள் அதென்ன என்பதைப் பார்ப்போம்.

உங்கள் வீடு கிரகப்பிரவேசம் நடக்கும் காலத்தில், உங்களைத் தேடி வருபவர்களை வரவேற்று, பூஜை தொடங்கும் முன்பு அனைவரையும் வரவேற்று அமரச் செய்துவிட்டு, கணபதி, நவக்கிரக, லட்சுமி பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு..

யக்ஞம் செய்ய வந்த பண்டிதர்கள் பூஜை செய்து கொடுத்த பின்பு, பால் காய்ச்சும் போது மகாகணபதி ஹோமம் செய்த ஹோம குண்டத்திலேயே சிலர் பால் காய்ச்சுவார்கள். இது மிக மிக மிகத் தவறு. பெண்கள் செய்யக்கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இதனால் கிரகப்பிரவேசத்தின் போது செய்த யாகம் பலனில்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. 

கிரகப்பிரவேச விசேஷம் என்பது இன்று வியாபாரப் பொருளாகி விட்டது. 100% ஆக்குப்பிறையில் (அடுக்களை - Kitchen) மட்டுமே பால் காய்ச்ச வேண்டும். பால் 

காய்ந்தவுடன் பாலை இறக்கும்முன் ஒரு டம்ளர் உரை மோருக்கு எடுத்து வைத்து பின் அதை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் ஹோம குண்டத்தில் பால் காய்ச்சக்கூடாது.

குறிப்பு : பால் காய்ச்சுவதற்கு மண் அடுப்பே சிறந்தது. மேலும் பித்தளை பாத்திரத்தில் பால் காய்ச்சுவதால் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். முடிந்தவரை எவர்சில்வரில் காய்ச்சுவதைத் தவிர்க்கவும்.

No comments:

Post a Comment