Saturday 17 February 2018

குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

marriage

குளிகை என்பது ராகு காலம், எமகண்டம் போன்றது தான். குளிகன் என்றால் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். ராகு காலத்தை ராகுவிற்கும், எமகண்டத்தை கேதுவிற்கும் சொல்வது போல, குளிகனைச் சனியின் மைந்தன் என்று சொல்வார்கள். அதாவது சனியின் ஆதிக்க நேரம் அது. அந்த நேரத்தில் சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

குளிகை நேரத்தில் செய்யக்கூடாதவை :

குளிகை நேரத்தில் ஒரு செயலை தொடங்கினால் வளர்ந்து கொண்ட போகும். கடன் வாங்குவது, வீட்டை உடைப்பது, இறந்தவர் உடலை எடுப்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் செய்யாமல் இருக்க வேண்டும். பெண் பார்க்க செல்வதைத் தவிர்க்கலாம். கூடுமானவரை அறுவை சிகிச்சை செய்வது குளிகை முடிந்ததும் செய்யலாம். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்...எல்லோரின் வாழ்விலும் கட்டாயம் நடக்க வேண்டிய சுபநிகழ்ச்சி, இதைக் குளிகை இல்லாத நேரத்தில் செய்வது நல்லது திரும்ப-திரும்ப நிகழாமல் இருக்கும்.

குளிகை நேரத்தில் செய்ய வேண்டியவை :

இந்நேரத்தில் கடனை திருப்பிக் கொடுப்பது, வீடு, நகை வாங்குவது, நகை அணிவது, வீடு கிரகப்பிரவேசம் செய்வது போன்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், தொடர்ந்து செய்வதாக அமையும். எந்தவித தங்கு தடையும் இன்றி சுபமாக முடியும்.

No comments:

Post a Comment