Sunday 11 February 2018

நாக வழிபாடு ஏன் ?

Image result for nagaraja

நாக வழிபாடு என்பது தத்துவார்த்த ரீதியானது. நாகப்பாம்புகள் எவ்வளவு தூசு மிக்க பகுதிக்குள் ஊர்ந்து சென்றாலும் அவற்றின் மீது அது ஒட்டுவதில்லை. மனிதனும் உலக வாழ்க்கையில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது சருகுகளும், முட்களும் கிடக்கும் பாதை தான். சருகு, முட்கள் என்பது நம் உறவுகளை குறிக்கும். அவர்களோடு ஒட்டியும் இருக்க வேண்டும், ஒட்டாமலும் இருக்க வேண்டும், அதாவது தாமரை இலை தண்ணீர் போல் இருக்க வேண்டும். அதிக பாசம் வைப்பதும் ஆபத்து, பாசமின்றி வெறுப்பைக் காட்டுவதும் ஆபத்து. பாம்புகள் எப்படி தூசுக்குள்ளும் அது ஒட்டாமல் வாழ்கிறதோ, அதுபோல் நம் வாழ்வும் அமைய வேண்டும். இத்தகைய அரிய தத்துவத்தை நமக்கு போதிக்கும் குருமார்களான பாம்புகளும் நம் வழிபாட்டிற்குரியவை ஆயின.

No comments:

Post a Comment