தந்தையான சிவபெருமானைப் போலவே, தோற்றங்களில் சிலவும், குணங்களில் சிலவும் தனயனான விநாயகப்பெருமானிடம் உண்டு. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்று ஒரு பழமொழி வழக்கில் உண்டு. ஆனால் தந்தையான சிவபெருமானைப் போலவே, தோற்றங்களில் சிலவும், குணங்களில் சிலவும் தனயனான விநாயகப்பெருமானிடம் உண்டு. அதைப் பற்றிப் பார்க்கலாம்.
* ஈசனைப் போலவே, விநாயகரும் சிவந்த மேனியைக் கொண்டனர்.
* பார்வதி தேவி, சிவபெருமானின் இடப் பாகத்தில் இருப்பது போல, வல்லபை விநாயகரின் இடப்பாகத்திலும் பார்வதி தேவி இருப்பார்.
* சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் உண்டு. அதேபோல், ஹேரம்ப கணபதிக்கும் 5 தலைகள் உண்டு.
* தந்தையான ஈசனுக்கும், தனயனான விக்னேஸ்வரருக்கும் மூன்று கண்கள் உண்டு.
* இருவருமே பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பார்கள்.
* ஈசன் நடனக் கோலத்தில் இருப்பதை நடராஜர் என்கிறோம். அதே போல் விநாயகர் நடனக் கோலத்தில் இருப்பதை நர்த்தன கணபதி என்கிறோம்.
* இருவரும் தலையில் மூன்றாம் பிறையை அணிந்திருப்பார்கள்.
No comments:
Post a Comment