Wednesday 14 February 2018

மரம் வளர்க்க அப்போதே சொன்னாங்க!


குடியிருக்கும் வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடி அவசியம் இருக்க வேண்டும் என்கிறார் வராகமிகிரர். பிருகத் சம்ஹிதை என்னும் நூலில் இவர், “மரம் இருக்கும் வீட்டில் தெய்வீகமான சூழலும், வீட்டிலுள்ள அனைவருக்கும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும். வீட்டு வாசலை மறைத்துக் கொண்டு மரம் வளர்க்கக் கூடாது. தேவையில்லாமல் பச்சை மரத்தை வெட்டக்கூடாது. பால் வடியும் எருக்கு, அத்தி, ஆல், அரசு ஆகிய மரங்களை வெட்டுவதை தவிர்ப்பது நல்லது. மரங்களைக் கட்டாயம் வெட்டும் சூழல் ஏற்பட்டால் பணியை சனிக்கிழமையன்று பகலில் செய்வது நல்லது,” என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment