Wednesday 14 February 2018

நெல்லிக்கனி சாப்பிட நல்லநாள்


நெல்லி இலைகளால் விஷ்ணுவை அர்ச்சிப்பது விசேஷமானது. நெல்லிமரம் உள்ள இடத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். எர்ணாகுளம் அருகிலுள்ள காலடி கிருஷ்ணன் கோவிலில், லட்சுமி தாயாருக்கு தங்க நெல்லிக்கனிகளால் அபிஷேகம் செய்வர். ஏகாதசி திதியன்று தண்ணீரில் நெல்லிக்கனிகளைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அதில் நீராடினாலும், ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி திதியில் நெல்லிக்கனியை சாப்பிட்டாலும் உடலுக்கு நல்லது. ஆன்மிக ரீதியாக, நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி, காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள்விருத்தி தரக்கூடியது. அதனால் தான் அவ்வைக்கு, அதியமான் நெல்லிக்கனியை வழங்கினான். கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லிக்கனி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள். அதற்கு 'ஆமலகம்' என்று பெயர். ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லி 
சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment