சந்திர மங்கள யோகம் - பெயரிலிருந்தே, இந்த யோகத்தில் சந்திரனும், மங்கள் என்று சொல்லப்படுகிற செவ்வாயும் சம்மந்தப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரே ராசியில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால், அது சந்திர மங்கள யோகமாகும்.
அதைத் தவிர, சந்திரனும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தாலும் அதுவும் சந்திர மங்கள யோகம் தான்.
சரி! இந்த யோகத்திற்குப் பலன் என்ன?
இந்த யோகம் இருப்பவர்கள், தன் தாயைக் கடுமையாகப் பேசுவர். சமயங்களில், தாயிடம் இரக்கமின்றியும் நடந்துகொள்வர். நியாயமற்ற வழிகளில் பொருளீட்டுவர். இந்த யோகத்தின் பலனைப் பார்க்கும்போது, இது ஒரு அவயோகமாகவே காணப்படுகிறது.
சந்திரன் என்பவர் தாயாருக்குக் காரகம் வகிப்பவர். செவ்வாய் ஒரு பாப கிரகம். ஆக, கெட்டவர் சேர்க்கை பெற்ற சந்திரன் கெட்டுவிடுகிறார். ஆக, இந்த ஜாதகக்காரர், தாயிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்.
சரி! கடக, சிம்ம லக்கின ஜாதகக்காரர்களுக்கு செவ்வாய் யோக காரகனாயிற்றே! ஆக, அந்த லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் நல்லதுதானே செய்ய வேண்டும். அவர்களுக்கு இந்த யோகம் எத்தகைய பலனைக் கொடுக்கும். நல்ல பலனைக் கொடுக்குமா?
செவ்வாய், இயற்கையிலேயே ஒரு பாப கிரகம். ஆகவே, எல்லா லக்கினக்காரர்களுக்கும் மேற்கூறிய பலனையே கொடுத்து வருகிறார்.
நாம் உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.
இவருக்கு செவ்வாய் உச்சம். இருப்பினும் சந்திரனைப் பார்க்கிறார். இவர் தன் தாயாரிடம் பேசும்போது கடுமையாகத்தான் பேசுவார். இவருக்கு இந்த சந்திர மங்கள யோகம் இருக்கிறது.
இதேபோல், செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருக்கும் ஜாதகங்களையும் பார்த்து இருக்கிறேன். அவர்கள் எல்லோருமே, ஏதோ ஒருவிதத்தில் தாயாருக்கு ஆதரவில்லாத நிலையில் இருப்பார்கள். ஆகவே, சந்திர மங்கள யோகம், ஒரு அவயோகமே.
No comments:
Post a Comment