Tuesday 13 February 2018

சிவராத்திரி மகிமையை விளக்கும் கதை

சிவராத்திரி மகிமையை விளக்கும் கதை

சிவராத்திரி இரவில் விரதம் இருப்போருக்கு மோட்சம் அளிக்க வேண்டுமென பரமேசுவரனிடம் பராசக்தி வரம் பெற்றார் என புராணக் கதை சொல்கிறது.

இட்சுவாகு குலத்தில் உதித்த சித்ரபானு என்ற மன்னன் ஜம்புத்வீபத்தை ஆட்சி புரிந்தபோது மகா சிவராத்திரியின் போதும் தனது மனைவியுடன் உபவாசம் இருந்து சிவபூஜை செய்தான்.

ஒரு சிவராத்திரியன்று அஷ்ட வக்ர ரிஷி அவனது தர்பாருக்கு விஜயம் செய்தார்கள். அப்போது அவர்கள் சிவராத்திரி மகிமையை விளக்க ஒரு கதை சொன்னார்கள்.

வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றான். இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு புலியைக் கண்டான். அவனை பார்த்த புலி துரத்தியது. புலிக்கு பயந்த வேடன் கிடுகிடுவென்று ஒரு வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான்.

கீழே புலி காத்துக் கொண்டிருந்தது. வேடனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது. கிளையில் படுத்து தூங்கலாம் என்றால் தூக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுமோ என்ற பயம். எனவே தூக்கம் வராதிருக்க மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தன. அன்று சிவராத்திரி. வேடன் அந்த ராத்திரி முழுவதும் தூங்காமல், உணவு எதுவும் சாப்பிடாமல் வில்வ இலைகளை பறித்து சிவலிங்கத்தின் மீது போட்ட செயல் சிவனுக்கு அர்ச்சனை ஆனது.

தன்னை அறியாமல் சிவராத்திரி விரதம் இருந்த வேடனின் முன்னால், புலி உருவில் வந்த சிவபெருமான் காட்சியளித்தார். வேடனின் செயலை பாராட்டி மோட்சப் பதவி அருளினார். இந்தக் கதையை ரிஷிகள் சொல்லக் கேட்ட மன்னன் புன்னகை செய்தான்.

“முன் பிறவியில் நான்தான் அந்த வேடன். சிவராத்திரி புண்ணியம் காரணமாக இப்பிறவியில் சக்கரவர்த்தியாக பிறந்திருக்கிறேன்” என்று சித்ரபானு மன்னன் அஷ்ட வக்ர ரிஷியிடம் சொன்னானாம்.

இவர்கள் இவருடைய கர்வத்தையும் ஒடுக்கி உலகைக் காக்க அடிமுடி அறியாவண்ணம் நெடிய நெருப்பு மலையாக சிவபெருமான் உருவெடுத்து இரண்டு பயங்கர ஆயுதங்களுக்கிடையே நின்றார். ஈசன் அக்னி மலையாக உருவெடுத்த நாள்தான் மகா சிவராத்திரி.

அக்னி மலையைக் கண்டு அஞ்சி நின்ற நாராயணனையும் நான்முகனையும் தன் அடிமுடி கண்டு வர போட்டி வைத்தார். அன்னப் பறவையாக உருவெடுத்த பிரம்மாவாலும், வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவாலும் ஈசனின் சிரத்தையோ பாதத்தையோ காண முடியவில்லை. தோல்வி கண்டு சிவனை தஞ்சம் அடைந்தனர். இது அக்னித் தலமான திருவண்ணாமலையில் நடந்ததாகக் கூறுவர்.

உலகப் பிரளயம் ஏற்பட்டபோது, அந்த இரவுப் பொழுதில் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து அருள் பெற்றார் எனவும், அந்த இரவில் தன்னைப் போல விரதம் இருப்போர் யாராயினும் அவர்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டுமென பரமேசுவரனிடம் பராசக்தி வரம் பெற்றார் எனவும் இன்னொரு புராணக் கதை சொல்கிறது.

No comments:

Post a Comment