குழந்தைகள் வீட்டில் சப்தமாக விளையாடினால் 'கம்முன்னு இருங்க' என்று கண்டிப்பது வழக்கம். 'கம்' என்ற சொல் அமைதியைக் குறிக்கிறது. ஆன்மிகத்தில் முன்னேற, 'கம்' என்று தான் இருக்க வேண்டும் என்கின்றனர் அருளாளர்கள்.. 'கம்' என்பது விநாயகருக்கு உரிய பீஜ மந்திரம். பீஜம் என்றால் 'விதை'. விதை விதைத்தால் பயிர் வளரும். பக்தியோடு 'கம்' என்னும் மந்திரத்தைச் சொல்லி, கணபதியின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி கிடைக்கும். கணபதிக்குரிய பீஜ மந்திரம் 'ஓம் கம் கணபதயே நம'' என்பதாகும்.
Monday, 11 June 2018
கம்முன்னு இருங்க!கணபதியை பிடியுங்க!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment