Thursday 8 February 2018

கோவிலுக்கு செல்வது ஏன் ?


ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “ஆண்டவனை அடைய நாம் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.... அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா?” என்று கேட்டார். 

விவேகானந்தர் அவரிடம், “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார். அவர் ஓடிப் போய், ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார். 

சுவாமி அவரிடம், “நான் தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த செம்பு?” என்றார். 

கேள்வி கேட்டவர் குழம்பிப் போய், “செம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்?” என்று கேட்டார். 

சுவாமி அவரிடம், “ஆம் சகோதரனே... தண்ணீர் கொண்டு வர செம்பு தேவைப்படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும். அது தான் ஆலயம். அதனால் தான் கோவிலுக்குப் போகச் சொல்கிறேன்,” என்றார்.

No comments:

Post a Comment