Friday 16 February 2018

மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி


கோவில்களில் பூஜையின் போது மணி ஒலிப்பது வழக்கம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேரத்தைக் குறிக்கும்விதமாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை மணி ஒலிக்கின்றனர். கோவில் நடை சாத்திய பிறகும் இந்த மணி ஒலிக்கப்படும்.

இதற்கென தனி பணியாளர் இருக்கிறார். நேரத்தை குறிக்கும்விதமாக அடிக்கப்படும் மணி என்பதால் இதற்கு, 'நாழிகை மணி' என்று பெயர். திருவாரூர் தவிர அனைத்து கோவில்களில் உள்ள சிவன்களும், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜையில் ஒடுங்குவதாக ஐதீகம். இதை ஒட்டி இரவு 10:00 மணிக்கு நடராஜர் சன்னிதியில் அர்த்தஜாம பூஜை மிக விசேஷமாக நடக்கும்.

No comments:

Post a Comment