24-ந்தேதி (செவ்வாய்) :
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் யாழி வாகனத்தில் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
* திருச்சி தாயுமானவர் விடையாற்று உற்சவம்.
* திருஉத்திரகோசமங்கை ஆலயத்தில் மங்களேஸ்வரி அம்மன் காலை பல்லக்கிலும், இரவு காமதேனு வாகனத்திலும் பவனி வருதல்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந்தேதி (புதன்) :
* முகூர்த்த நாள்.
* ஸ்ரீவாசவி ஜெயந்தி.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்.
* மதுரை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் தங்கச் சப்பரத்தில் பவனி.
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி வெள்ளி மஞ்சத்தில் தபசுக் காட்சி.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (வியாழன்) :
* சர்வ ஏகாதசி.
* மதுரை மீனாட்சி சொக்கநாதர் திக் விஜயம் செய்தருளல், அம்மனும் சுவாமியும் இந்திர விமானத்தில் பவனி.
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவலிங்க பூஜை செய்தருளல்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* கீழ்நோக்கு நாள்.
27-ந்தேதி (வெள்ளி) :
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனத்தில் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மதுரை எழுந்தருளல்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பாடு.
* திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாண வைபவம்.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (சனி) :
* நரசிம்ம ஜெயந்தி.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரத உலா, இரவு சப்தாவரணம்.
* மதுரை கள்ளழகர் தல்லா குளத்தில் எதிர்சேவை.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் ரத உற்சவம்.
* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் வருசாபிஷேகம்.
* தூத்துக்குடி பாகம்பிரியாள், திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி, ஆறுமுகமங்கலம் 1001 விநாயகர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (ஞாயிறு) :
* சித்ரா பவுர்ணமி.
* மதுரை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் சித்திரை உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை.
* விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
* சமநோக்கு நாள்.
30-ந்தேதி (திங்கள்) :
* காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, பகல் கருடரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராய் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சேஷ வாகனத்தில், பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், இரவு வெட்டிவேர் சப்பரத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.
No comments:
Post a Comment