Saturday, 21 April 2018

திருமண தடை நீக்கும் திருப்பள்ளி எழுச்சி

திருமண தடை நீக்கும் திருப்பள்ளி எழுச்சி

காக்கும் கடவுளான விஷ்ணுவை மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் வழிபட்டால் கல்யாணமும் கைகூடும். கலகலப்பும் உருவாகும். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனை மணந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து வாசலில் கோலமிட்டு, கோலத்தின் மையத்தில் மங்கலம் தரும் நிறமான மஞ்சள் நிற பரங்கிப் பூவை சாணத்தின் நடுவில் வைத்து மகாலட்சுமியை வரவேற்க வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை பாடி விரதம் இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்று சிவன் வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்தால் இறையருளால் இனிய வாழ்க்கை அமையும்.

ஒரு சிலருக்கு நீண்ட காலமாக கல்யாணம் முடியாமல் இருக்கும். ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும் கல்யாணத்தில் தடையும், பிரச்சினைகளும் உருவாகும். விவாகம் முடிந்த பிறகு இனிய மணவாழ்க்கை அமைய சூடிக்கொடுத்த சுடர்க்கொடியையும், விஷ்ணுவையும் லட்சுமியையும், மார்கழி மாதத்தில் நோன்பு வைத்து, ஆலயம் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment