Monday, 23 April 2018

அங்காரகரின் வரலாற்று மூன்று புராணங்கள்

அங்காரகரின் வரலாற்று மூன்று புராணங்கள்

சிவபெருமான் உமாதேவியைப் பிரிந்து தனித்துக் கல்லால மரத்தின் கீழ் யோகம் புரிந்த போது அவரது நெற்றிக் கண்ணிலிருந்து நீர்த்துளி ஒன்று பூமியில் விழுந்தது. அந்த நீர்த்துளியிலிருந்து பிறந்தவர் அங்காரகர், அதனால் அவர் பூமியின் மகன் (குஜன்) என்று அழைக்கப்படுகிறார் என்றும் ‘பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமிதேவியால் வளர்க்கப்பட்டவர் ‘‘அங்காரகர்’’ என்றும், வீரபத்திரர் தக்கனின் யாகத்தை அழித்த பிறகு தேவர்களின் வேண்டுகோளுக்கு இனங்கிக் கோபம் தணிந்து அங்காரகவடிவம் பெற்றார் என்றும் அங்காரகரின் வரலாற்றைப் புராணங்கள் 3 விதமாகக் கூறுகின்றன. 

இவர் செந்நிறமானவர். அதனால் இவரைச் செவ்வாய் என்று உலகத்தார் அழைக்கின்றனர். இவரது கரம் விண்ணில் செவ்வொளி வீசி விளங்குவதால் அக்கிரகத்தைச் செம்மீன் என்று தமிழ் நூல்கள் பேசுகின்றன. 

அங்காரகர் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர். சிவப்பு நிறமானவர். அழகானவர். மாலினி, சுசீலினி என்ற இரண்டு மனைவிகளை உடையவர். முக்குணங்களிலே ராட்சச குணத்தவர். ரத்த சம்பந்தமுடையவர் சகோதரர் காரகர், பூமி காரகர், பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் முதலியவற்றைக் கொடுப்பவர், தற்பெருமைக்காரர்.

சுப்பிரமணியரை வழிபடுவதாலும், பவழ மாலை, பவழ மோதிரம் அணிவதாலும், சிவப்பு நிற ஆடை உடுத்துவதாலும், சிவப்பு நிறக் காளையைத் தானம் செய்வதாலும் துவரைத் தானியத்தைத் தானம் கொடுப்பதாலும், கார்த்திகை விரதம், செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதாலும் அங்காரக தோஷங்கள் நிவர்த்தியாகும். 

No comments:

Post a Comment