செவ்வாய் கிரகத்தின் ஆட்சி வீடுகள் மேஷம், விருச்சிகம் ஆகும். மகர லக்னத்தில் உச்சமடையும் செவ்வாய் அதற்கு நேர் ஏழாம் வீடான கடகத்தில் நீசம் பெற்று பலம் இழக்கிறார்.
புதனின் வீடுகளான மிதுனம், கன்னியில் செவ்வாய் பகவான் பகை நிலை பெறுகிறார். சூரியனின் வீடான சிம்மம் குருபகவானின் வீடுகளான தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் செவ்வாய் நட்பு நிலை பெறுகிறார். சுக்கிரனின் வீடுகளான துலாம், ரிஷபம் ஆகிய இடங்களில் சமமான நிலை பெறுகிறார். சனிபகவானின் கும்ப வீட்டிலும் சமநிலை பெறுகிறார்.
27 நட்சத்திரங்களில் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் செவ்வாயின் ஆதிபத்யமும், சாரமும் பெற்ற நட்சத்திரங்கள். இவை ரச்சு பொருத்தம் என்ற அமைப்பில் பார்க்கையில் சிரசு ரச்சுவை சேர்ந்தவை.
ஆண், பெண் இருவருக்குமே இதில் கண்ட மூன்றில் ஏதாவது ஒன்று என இருந்தால் திருமணம் செய்யவே கூடாது. உதாரணமாக பெண் மிருகசீரிடமாக இருந்து ஆண் சித்திரையோ அல்லது அவிட்ட நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.
இந்த மூன்று நட்சத்திரங்களும் முதல் இரண்டு பாதங்கள் ஒரு வீட்டிலும் மற்ற இரு பாதங்கள் அடுத்த வீட்டிலும் அமையும். உதாரணமாக மிருக சீரிடம் 1, 2ம் பாதம் ரிஷபத்திலும், 3, 4ம் பாதம் அடுத்த ராசியான மிதுனத்திலும் அமையும். ஆகவே தான் இம்மூன்று நட்சத்திரங்களும் உடலற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
செவ்வாய் பகவானுக்கு சூரியன், சந்திரன், குரு நண்பர்கள். சுக்கிரன், சனி இருவரும் சமநிலை அந்தஸ்து கொண்டவர்கள். புதன், ராகு, கேது ஆகிய மூவரும் பகைவர்கள். செவ்வாய் ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பவர். முருகபெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர்.
செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை, தானியம் இவருக்கு மிகவும் பிடித்த தானியம். அதே போல் சுவர்ப்புச்சுவை இவருக்கு பிடிக்கும். செம்பு, உலோகம், செவ்வாயின் உலோகம். செந்நிற ஆடையையே செவ்வாய் பகவான் விரும்பி அணிவார். நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும். செவ்வாய்க்கிழமை இவரின் கிழமை. இது இருகண்களும் இல்லாத குருட்டு கிழமை எனப்படுகிறது. எனவே சுப காரியங்களுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது இல்லை.
No comments:
Post a Comment