Friday 27 April 2018

கேட்டவரம் தரும் காணியாளம்மன்


குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் உள்ளன. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு பழமையான காணிகாரர்களும், அந்த காலத்து மன்னர்களும் வந்து வணங்கியதாக கூறபடுகின்ற கோவில் ஆரல்வாய்மொழி, நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழிக்கும், செண்பகராமன்புதூருக்கும் இடையே சாலை ஓரமாக உள்ளது. இந்த கோவிலில் விநாயகர்,காணியாளம்மன், சாஸ்தா, பூதத்தார் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் உள்ள பூதத்தார் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மலை வழியாக இங்கு வந்து தங்கியதாகவும், திருச்செந்தூர், திருக்கணங்குடி, நம்பி கோவில், பின்னர் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

காணியாளம்மனை வேண்டி வருகின்ற பக்தர்கள் எந்த வித வேண்டுதலுடன் வந்தாலும் உடனே முடித்து கொடுக்கின்ற சக்தி வாய்ந்த அம்மனாகவும் கருதப்படுகின்றது. இந்த பகுதி முழுவதும் முன்பு விளைநிலங்கள் நிறைந்த பகுதியாகவும், காடுகள் போன்று அடர்ந்து காணப்படுவதாகும். அப்போது விளைநிலங்களை வன விலங்குகள் வந்து நாசம் செய்கின்ற சூழ்நிலையில் விவசாயிகள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வேண்டுதல் வைத்ததால் விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வருவது இல்லை என கூறப்படுகிறது. இதே போல் இந்த பகுதிகளில் தொழில் நடத்துகின்றவர்கள் தங்களது தொழில்களில் ஏற்படுகின்ற சிக்கல்களை நீக்க மனம் உருகி வேண்டினால் எந்தவித சிக்கல்களையும் தீர்த்துவிடுகிறாள் காணியாளம்மாள். 

இதனால் காணியாளம்மாளை நாடி வருகின்ற பக்தர்களின் கூட்டம் அதிகம். பிரச்னைகளோடு தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு கேட்டவரம் தருகிறாள் காணியாளம்மன். கோவிலுக்கு அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயில் அமைந்துள்ள சாலையில் தனியாகவோ, புது தம்பதியாகவோ செல்கின்றவர்கள் எந்த வித பயமுமின்றி செல்வதற்காக காணியாளம்மன் பெண் உருவில் தோன்றி அவர்களுடன் சென்று பாதுகாப்பாக செல்கின்ற அளவுக்கு துணையாக செல்வாளாம். பங்குனி உத்திர நட்சத்திரத்திற்கு மன்னர் காலத்தில் இருந்தே கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பத்தார்கள், தங்களின் குடும்பகோவிலாக கொண்டு ஒன்று கூடி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment