ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி எந்த இடத்தில் இருந்தால் நாகதோஷம் வரும். அதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராகு பகவான் தனது வீடான கன்னியில் ஆட்சியுடனும், விருச்சிகத்தில் உச்சமாகவும் இருப்பார். கேந்திரஸ்தானங்களான 1, 4, 7, 10 -ம் இடங்களிலோ திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 -ம் இடங்களிலோ சுபக் கிரகங்களுடன் சேர்ந்தோ, சுபக்கிரகங்களால் பார்வையைப் பெற்று இருந்தாலோ, அவரது தசா புக்தி காலங்களில் திடீர் யோகம் ஏற்பட்டு ஜாதகர் பெரும் செல்வந்தராவார்.
ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி ஆகிய இடங்களிலிருந்து 2,4, 5, 7, 8, 12-ம் இடங்களில் இருப்பது நாகதோஷமாகும். நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும்.
* ஜாதகத்தில் ஆண் பெண் இருவருக்கும் நாக தோஷம் இருந்தால், அத்தகைய ஜாதகங்களைச் சேர்க்கலாம்.
* ஒருவருக்கு ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.
* ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்குமானால் அத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தை சேர்க்கலாம்.
அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஜன்ம நட்சத்திர தசையாக வருவதால் இவர்களுக்கு பாதிப்பு கிடையாது.
* திருவாதிரை சுவாதி, சதயம் ஆகிய 3 நட்சத்திரங்களும் ஜன்ம நட்சத்திரமாக இருந்தால், தோஷமாகாது.
ராகு தோஷமுள்ளவர்கள், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். ராகு காயத்ரி மந்திரத்தை காலை மாலை வேளைகளில் சொல்லி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment