மைசூரு மாநகரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் சாமுண்டி மலை இருக்கிறது. இந்த மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூரு சாம்ராஜ்ஜியத்தின் காவல் தெய்வம் என்று நம்பப்படுகிறது. சாமுண்டீஸ்வரி கோவில், 18 மகா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த கோவில் கி.பி.12-ம் நூற்றாண்டில் ஒய்சாலா மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி.பி.17-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. சாமுண்டி மலை அடிவாரத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் இந்தக் கோவில் உள்ளது. இதற்காக படிக்கட்டுகள் கி.பி.1659-ல் கட்டப்பட்டது. இதன் 800-வது படிக்கட்டில் சிறிய சிவன் கோவில் உள்ளது.
இதன் எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல்லால் ஆன பிரமாண்ட நந்தி உள்ளது. ஆதிகாலத்தில் இந்தப் பகுதி மகிஷாசூரன் என்ற அசுர வம்ச மன்னனால் ஆளப்பட்டதாகவும், அவனது பெயரிலேயே மகிஷா ஊரு என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி மைசூரு என்றானதாகவும் சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசூரனை கொன்று இந்த நகரத்தின் காவல் தெய்வமாக மாறியதாக வரலாறு கூறுகிறது.
No comments:
Post a Comment