Saturday, 28 April 2018

சித்ரா பௌர்ணமியும், சித்ரான்ன ரகசியமும்..

amman

மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

ஆன்மிக ரீதியாக இந்த நாளை சித்திரகுப்தன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒருநாள் கையிலாயத்தில் பார்வதி தேவி அழகான உருவத்தை ஓவியமாக வரைந்துகொண்டிருந்தார். அந்த உருவம் பார்ப்பதற்கு மிகவும் தத்ருபமாக இருந்தது. இதைப் பார்த்த சிவபெருமான் அதற்கு உயிர் கொடுக்க நினைத்தார். உடனே ஈசன் தனது வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. 

சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தைகாக்கும் சக்தியைக் கொடுத்து யமதர்மராஜனுக்கு உதவியாக இருக்கப் பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.

சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தைக் காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் (குப்தன் என்றால் ரகசியத்தைக் காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.

ஜோதிட ரீதியாக சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார். மேஷம் என்பது சித்திரை என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் உச்சமடைக்கூடிய சூரியன் அதன் 7-ம் இடத்தில் சந்திரனும் ஒன்றாக இருப்பதால், சூரியனும், சந்திரனும் சமசப்தமான பார்வை பார்த்துக்கொள்வதால் அந்தப் பௌர்ணமிக்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த நாளில் நாம் கடவுளை பிரார்த்தனை செய்யும் போது, வழக்கத்தை விட அதிக பலன் கிடைக்கும் என்று ஜோதிட ரீதியாகக் கூறப்பட்டுள்ளது. 

அந்த காலத்தில் கிராம மக்கள் சித்ரா பௌர்ணமி அன்றிரவு (வீட்டில் இருப்பவர்கள், அக்கம் பக்கத்தினர்) அவரவர்கள் செய்த உணவினை நிலவொளியில் வைத்து, சில நாட்டுப்புறப் பாடல்களை பாடி, மகிழ்ச்சியுடன் தாங்கள் கொண்டுவந்த உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். அப்போது சந்திரனுடைய காந்தசக்தியை அந்த உணவு மூலமாகப் பரவும் என்பது ஐதீகம். அதை உட்கொண்டால், உடலுக்கும், மனதுக்கும் நன்மையைத் தரும் என்று மக்களின் நம்பிக்கை. இந்த முறையே சித்ரான்னம் என்று கூறுவர். 

No comments:

Post a Comment