Friday 27 April 2018

சரியான தண்டனை



மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை சாம்பல் என கேலி செய்வான். ஒருநாள் இரவு காவலாளி இல்லாத மாந்தோப்பில் பழங்களை பறித்து, அதை விற்று விட்டான்.

பழங்கள் காணாதது கண்ட தோட்டக்காரன், காவலர்களை நியமித்தான். இதைஅறியாத மாணிக்கம் மீண்டும் தோட்டத்தில் நுழைந்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவனை நோக்கி வர, அதை கவனித்த மாணிக்கம் உஷாரானான்.

மறைந்து நின்று, அங்கு குவிந்து கிடந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் பூசிக்கொண்டான். தியானத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ சாமியார் இருப்பதை கண்டனர். 

மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்கள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கை பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரை தரிசிக்க வந்தனர். மாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, கிடைத்ததை சேமித்தான். ஆனால் ஒருநாள் அவனது குட்டு வெளிப்பட்டு சிக்கினான். சிறையில் சித்ரவதைகளை அனுபவித்தான். 

தெய்வத்தின் பெயரால் மோசடி செய்ததால் என்னாகும் என புரிந்து கொண்டு, ''சிவனே! எனக்கு சீக்கிரம் விடுதலை கொடு,'' என பிரார்த்திக்க ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment