உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போவதற்கு காரணம் பிரம்மஹத்தி தோஷம். தாய்க்கு உணவளிக்காமல் இருப்பது, பசுவை கொல்வது, ஆசிரியரை அலட்சியப்படுத்துவது, நன்றி மறப்பது, கோயில் சொத்தை திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் உண்டாகும்.
இதற்கு பரிகாரமாக சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்ராயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர்.
திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என பலபெயர்களில் இவரை அழைப்பர். சனிக்கிழமையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தீபம் ஏற்றி, 'ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்ற மந்திரம் சொல்லி 12 முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். வியாழன் அல்லது சனிக்கிழமையில் சிவப்பு மலர்களால் ஆன மாலை சூட்டி வழிபட, நினைத்தது நிறைவேறும். தினமும் கைப்பிடி அரிசியை தானம் செய்யலாம். எள்சாதம் நைவேத்யம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment