நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் அதை எந்த திதியில் செய்தால் சிறப்பான பலன்களைப் பெற முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்தார்கள்.
முக்கியமாக நாம் செய்யும் பரிகாரம், பூஜைகள் போன்ற தெய்வ காரியங்களை செய்வதற்கு எந்த திதியில் செய்தால் முழு வெற்றி கிடைக்கு என்பதைத் தெரிந்துகொள்வோம்.
அஷ்டமி
இந்த திதிக்கு அதிதேவதை சிவபெருமான். அஷ்டமி திதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். பைரவ வழிபாடு மேற்கொள்ளலாம்.
நவமி
இந்த திதிக்கு அதிதேவதை அம்பிகை ஆவார். இந்நாளில் கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை துவங்கலாம். தெய்வங்களுக்கு உயிர் பலிகொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.
தசமி
தசமி திதியில் அனைத்து சுப காரியங்களிலும் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை எமதர்மன். ஆன்மிகப் பணிகளுக்கு உகந்த நாளிது. மேலும், மதச் சடங்குகளைச் செய்யலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம்.
ஏகாதசி
இந்த திதிக்கு அதிதேவதை ருத்ரன். ஏகாதசி திதியில் விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். நோய்க்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம் மற்றும் தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். திருமாலை வழிபடலாம்.
துவாதசி
இந்தத் திதிக்கு அதிதேவதை விஷ்ணு ஆவார். துவாதசி திதியில் மதச்சடங்குகளில் ஈடுபடலாம். தர்ம காரியம் செய்யலாம்.
திரயோதசி
இந்த திதிக்கு மன்மதன் அதிதேவதை ஆவார். திரயோதசி திதியில் சிவ வழிபாடு செய்வது விசேஷமாகும். மேலும், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். மேலும், புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். பெண் பார்க்க செல்லலாம்.
சதுர்தசி
இந்த திதிக்கு அதிதேவதை காளி ஆவார். ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் சதுர்தசி திதி உகந்த நாள். யாத்திரை செல்லலாம்.
பௌர்ணமி
பௌர்ணமி திதியில் விரதம் மேற்கொள்ளலாம். ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். மங்களகரமான காரியங்களை செய்யலாம். அம்பாளை வழிபடுவது சிறப்பு.
அமாவாசை
அமாவாசை திதியில் பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளைச் செய்யலாம். இயந்திரப்பணிகளை மேற்கொள்ளலாம். இந்த திதி தான, தர்ம காரியங்களுக்கு உகந்ததாகும்.
No comments:
Post a Comment