Saturday, 14 April 2018

நீங்கள் செய்யும் தொழில் விருத்தியடைய வேண்டுமா? இதோ தாந்திரீக பரிகாரம்!

business

நீங்கள் செய்யும் தொழில், வியாபாரம் விருத்தி அடைய வேண்டுமெனில், இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

இந்தப் பரிகாரத்தை திங்கள்கிழமை அன்று செய்யலாம். அன்று காலையில் மஞ்சள் பூசிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும், வெள்ளி பிள்ளையார் சிலை அல்லது டாலர் எடுத்துக்கொள்ளலாம். சிவப்பு வண்ண துணியில் ஒரு ரூபாய் நாணயம் ஐந்து, மஞ்சள் கலந்த பச்சரிசி கைப்பிடி அளவு, குங்குமப்பூ எடுத்துக்கொள்ளவும். 

ஒரு வெள்ளை காகிதத்தில் சிவப்பு பேனாவில் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், உங்கள் நிறுவனத்தின் பெயர் முகவரி எழுதி அதன் கீழே எனது தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. எனது வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கிறது. எனது குடும்பத்தில் அனைவரும் மிக சந்தோஷமாக இருக்கிறோம். எனது தொழிலில் பணவரவு மிகத் திருப்தியாக உள்ளது. என நேர்மறையான வார்த்தைகள் மட்டும் (positive words) எழுதி, பத்திரிகைக்கு மஞ்சள் பூசுவது போன்று, நான்கு பக்கத்திலும் மஞ்சள் பூச வேண்டும். 

தேங்காய், வெள்ளி பிள்ளையார், ஒரு ரூபாய் நாணயங்கள், மஞ்சள் கலந்த அரிசி, positive words எழுதிய வெள்ளை தாள் இவை அனைத்தையும் சிவப்பு வண்ண துணியில் கட்டி சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து வியாபார நிறுவனத்தில் வாசலின் உள்பகுதியில் கட்டி வைக்கவும் தினமும் தீப தூபம் காட்டி வரவும். இவ்வாறு செய்து வந்தால் நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம் சிறப்பாக நடக்கும், பணவரவு அதிகமாகும்.

No comments:

Post a Comment