சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு "கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது" என்று பொருள். அதாவது 'க்ஷயம்' என்றால் கேடு, 'அக்ஷயம்' என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.
அட்சய திருதியில் பல்வேறு விஷேசங்கள் இருந்தாலும், இதை மட்டும் செய்ய மறக்கக் கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அது என்ன என்றால்?
அட்சய திருதியை அன்றைக்குத் திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்துத் திதி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படித் திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்துத்தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம்தானே. அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது.
அட்சய திருதியில் திதி கொடுப்பதினால் 30 வருடம் திதி கொடுத்த பலனாம். இதுவரை நீங்கள் சரிவர திதி கொடுக்கவில்லை என்றாலும், திதி கொடுப்பதில் ஏதேனும் தவறு இருந்திருந்தாலும் அதைச் சரிசெய்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறக்காதீர்கள். முக்கியமாகத் தந்தை இல்லாதவர்கள் திதி கொடுப்பது அவசியம். இவ்வாறு திதி கொடுப்பதினால், அவர்களின் குடும்பம் எந்தவித பிதுர் சாபமும், பாதிப்பும் இன்றி நலமுடன் வாழலாம்.
வேறு என்ன செய்யலாம்?
பாதுகா (செருப்பு தானம்) செய்யலாம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும் ஏழை, எளியவருக்கு தங்களால் இயன்ற செருப்பை வாங்கி அவர்களுக்கு அளிக்கலாம். இதனால், குறைவின்றி செல்வம் எப்போதும் நிலைக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment