Sunday, 8 April 2018

துவாரபாலகர்கள் உணர்த்தும் ஆன்மிக உண்மை

துவாரபாலகர்கள் உணர்த்தும் ஆன்மிக உண்மை

இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக் கிரகத்திற்கு வெளிப்பகுதியில் வாசலில் இருபுறமும் துவாரபாலகர்கள் இடம்பெற்றிருப்பார்கள். இந்த துவாரபாலர்கள் அமைக்கப்படுவதில் கூட ஒரு விதியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டியபடியும், மற்றொருவர் தன் கையை விரித்துக் காட்டியபடியும் அமைக்கப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

உள்ளே வழிபடச் செல்லும் பக்தர்களுக்கு, ‘கடவுள் ஒன்றே’ என்பதை, ஆள்காட்டி விரல் உணர்த்துகிறது. அதே போல் கையை விரித்துக் காட்டும் துவாரபாலகர் கூறும் தத்துவம், ‘கடவுள் ஒன்றைத் தவிர வேறில்லை’ என்பதாகும். இந்தத் தத்துவத்தையே ‘ஏகம் ஏவ அத்விநீயம் பிரும்மம்’ என்று வேதம் எடுத்துரைக்கிறது.

தற்போது அமைக்கப்படும் பெரும்பாலான ஆலயங்களில் இருபுறம் உள்ள துவாரபாலகர்களும், ஆள்காட்டி விரலைக் காட்டுவதாகவே அமைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment