Monday, 9 April 2018

கோபம் கொண்ட அத்தைகள்


கண்ணன் தன் தாய்மாமனான கம்சனைக் கொன்றான். இதனால், கோபம் கொண்ட கண்ணனின் அத்தைகளான அஸ்தி, பிரஸ்தி இருவரும் கோபம் கொண்டனர். தங்களின் தந்தையான ஜராசந்தனைக் கண்ணனுக்கு எதிராகத் துாண்டி விட்டனர். ஜராசந்தன் கண்ணன் ஆட்சி செய்த மதுரா நகரின் மீது 17 முறை படையெடுத்து தோல்வியடைந்தான். இறுதியில் 18 ம் முறை மதுராவை கைப்பற்றினான். இதன்பின் கண்ணனின் தலைமையில் பலராமன் உள்ளிட்ட யாதவர்கள் ரைவதகூடம் என்னும் மலையை அடைந்தனர். துவாரகை என்னும் புதிய நகரை நிர்மாணித்தனர். இங்குள்ள கோயிலில் உள்ள கண்ணன் 'துவாரகாநாத்' என அழைக்கப்படுகிறார். துவாரகா என்பதற்கு 'மோட்சத்தின் வாசல்' என்பது பொருள்.

No comments:

Post a Comment