நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதம். அதாவது பச்சைக்கல். ‘மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும்’ என்பார்கள். எனவேதான் மரகத லிங்கம் உள்ள திருக்கோவில்களில் இறைவனுக்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.
புதன் கிரகத்தால் பலன்பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை மோதிரத்தை எந்த வடிவத்தில் செய்து, எந்த விரலில், எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொதுவாக பெண்கள் நல்ல மரகதத்தை அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment