Tuesday, 17 April 2018

விரத நாட்களில் எதை எப்போது சாப்பிடக்கூடாது?

விரத நாட்களில் எதை எப்போது சாப்பிடக்கூடாது?

விரத நாட்களில் சில வகை உணவுகளைச் சாப்பிடலாம். சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது.

சான்றோர்கள், விரதம் முடிந்த பிறகு நாம் சாப்பிட வேண்டுமென்று சொல்லிய உணவுகளைச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். சாப்பிடக்கூடாது என்று கூறிய உணவுகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்படும்.

அந்த அடிப்படையில் ஏகாதசியன்று விரதமிருப்பவர்கள் துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்.

துவாதசியன்று புடலங்காய் சாப்பிடக் கூடாது. பகல் தூக்கம் வைத்துக் கொள்ளக் கூடாது. தம்பதியர்கள் தாம்பத்ய உறவு கூடாது.

சுபகாரியப்பேச்சுகள் நடைபெறும் நாளில் வீட்டில் பாகற்காய், கசப்புப் பொருள் உணவு சமைக்கக் கூடாது. ஒரு கோட்டில் மாக்கோலம் போடக்கூடாது. அசுப காரியங்கள் நடைபெறும் வீட்டில் இரட்டை கோட்டில் கோலம் போடக்கூடாது.

துளசி மாடத்திற்கும், வீட்டு பூஜையறையிலும் குடும்ப உறுப்பினர்களே விளக்கேற்றிக் கோலம் போடுவது நல்லது. மாதப்பிறப்பு அன்றும், அமாவாசை அன்றும் துளசி பறிக்கக்கூடாது. அமாவாசை அன்று  அசைவம் சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment