Tuesday, 17 April 2018

கடலில் பிறக்கும் சங்கு கண் திருஷ்டியைப் போக்கும்

கடலில் பிறக்கும் சங்கு கண் திருஷ்டியைப் போக்கும்

சங்கு கடலில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் ஜீவ சக்தி மிகுந்தவையாக இருக்கின்றன. திருஷ்டி தோஷத்தை போக்கக் கூடியது. வீட்டில் படி தாண்டியதும் வெண் சங்கைப் பதித்து வைத்திருப்பர். வாகனங்களிலும், வளர்ப்பு பிராணிகள் கழுத்திலும், மாடுகளின் கழுத்திலும் கட்டி வைத்திருப்பர்.

இளம் பெண்கள் ருதுவானால் உடனே சங்கொலி எழுப்பித் தன் மகள் பருவமடைந்ததைப் பெற்றோர்கள் தெரிவிப்பர். அவரைச் செடிகள் போன்றவை வீட்டில் பூக்கும் பொழுதும், வயதிற்கு வந்த பெண்கள் செடியின் முன்னால் நின்று சங்கு ஊதினால் நிறையப் பூ, பூத்துக் காய் காய்க்கும்.

திருமணத்தில் தாலி கட்டும் பொழுது சங்கொலி எழுப்புவர். சங்கில் இரண்டு வகை உண்டு. ஒன்று வலம்புரிச்சங்கு, மற்றொன்று இடம் புரிச்சங்கு, வலம்புரிச்சங்கில் நீர் நிரப்பி அல்லது பால் நிரப்பி சிவனுக்கு அபிஷேகம் செய்தால் செழிப்பான வாழ்க்கை நமக்கு அமையும். இல்லத்திலும் முறைப்படி பூஜையறையில் சங்கை வைத்து வழிபாடு செய்யலாம். சங்கின் ஒலி கேட்கும் இடமெல்லாம் சந்தோஷம் பெருகும். 

No comments:

Post a Comment