Thursday 19 April 2018

சாய்நாதர் தெய்வீக அவதாரம் : அவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார்

Related image

ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, 'அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு' என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, 'இனி பயமில்லை' என்றார். 

மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, 'இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!' என்று எச்சரித்தார். பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள். பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். 

பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கி வாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக 'பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்' என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.

No comments:

Post a Comment